Breaking News

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரே பார்வையில்

கடந்த பொதுத் தேர்தலில் பிரயோகிக்கப்பட்ட வாக்குகளுடன், நேற்று நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குகளை ஒப்பிடும் போது, கட்சிகளுக்கு இடையில் பகிரப்பட்ட வாக்குகளில் பாரிய வித்தியாசங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மொத்த செல்லுபடியான வாக்குகளில் 6,863,186 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றது. இது 61.56 சதவீதமாகும். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 4,503,930 வாக்குகளையே …

Read More »

பிரசன்ன ரணவீர 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில், பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரசன்ன ரணவீர இன்று காலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையிலேயே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Read More »

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையான பின்னரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »