விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த கைதிகள் விசேட பொது மன்னிப்பில் விடுக்கப்படவுள்ளனர். அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை அனுபவித்த 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் …
Read More »இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தை நான் வரவேற்கிறேன் – அனுரகுமார
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது வரவேற்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நான் வரவேற்கிறேன். அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதும், மோதலுக்குப் பதிலாக பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுப்பதும் உண்மையான அரசியல் மேதைமை. ஒரு அண்டை நாடு மற்றும் நண்பராக, ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் நீடித்த அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை …
Read More »எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP ! – அஜித் ராஜபக்ஷ
எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP எனவும் அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ கூறினார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP. அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளது. அந்த நிதியை பாவித்து தேவையான அரசியல் டீல்களை செய்துகொள்வார்கள்” என கூறினார். அதற்கு புது கதை சொல்லி சமாளிப்பார்கள் என …
Read More »வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!
வாகன இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதனால் இந்த தொழில்துறையின் முக்கிய பிரிவுகளில் படிப்படியாக மீண்டும் செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேச ரீதியாக முன்னணியில் உள்ள வாகன உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் இறக்குமதி தளர்த்தப்பட்டமை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளதுடன் வாகனச் சந்தை நுட்பமான கட்டத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வாகனச் சந்தை நுட்பமான மீட்சி கட்டத்தில் உள்ளதனால், …
Read More »முட்டையின் விலையில் வீழ்ச்சி
சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை இந்த அளவுக்கு குறைவடைந்துள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Read More »வார இறுதி நாளில் தங்க விலை நிலவரம்!
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 244,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,500 ரூபாவாகவும், 18 …
Read More »நிலவும் உப்பு தட்டுப்பாடு: யாழ்.மக்களுக்காக விசேட நடவடிக்கை..!
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், உப்பு விநியோகம் குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உப்பின் விலை கட்டுப்பாடற்ற ரீதியில் அதிகரித்துள்ள நிலையில், அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமானது மன்னாரில் உப்பைக் கொள்வனவு செய்து யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் விநியோகித்துள்ளது. 179 ரூபாவுக்கு ஒரு பக்கெட் உப்பை பொதுமக்கள் இன்று(10) முதல் கொள்வனவு செய்ய முடியும். பொதுமகன் ஒருவர் …
Read More »நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
நாடளாவிய ரீதியில் வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் (Department of Prisons Srilanka) தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 388 கைதிகளுக்கு இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க (Gamini B Dissanayake)தெரிவித்துள்ளார். இந்த பொது …
Read More »தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்க தயார் : கஜேந்திரகுமார்
புரிந்துணர்வு அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (10.05.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், “நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய பாதையிலிருந்து தமிழ் மக்கள் படிப்படியாக விலகி வருகின்றார்கள் என்று ஒரு செய்தி பரப்பப்பட்டு வந்தது. இவ்வாறான …
Read More »டேன் பிரியசாத் கொலை – இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2 சந்தேகநபர்களும் சாட்சியாளர்களால் இன்று அடையாளங்காட்டப்பட்டனர். இதற்கான அடையாள அணிவகுப்பு கொழும்பு பிரதான நீதவான் ஹர்சன கெகுனுவெலவின் உத்தரவுக்கமைய இன்று காலை இடம்பெற்றது. இதன்போது குறித்த மூன்று சாட்சியாளர்களும் இரண்டு சந்தேகநபர்களையும் அடையாளம் கண்டு நீதிமன்றுக்கு அறிவித்தனர். இந்தநிலையில், சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கும் குறித்த கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் …
Read More »