உலகின் இரண்டு பாரிய பொருளாதார நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக யுத்தம் முடிவிற்கு வரக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு எதிராக பாரிய வரியினை பிரகடனப்படுத்தியிருந்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குச் சீனா உடனடியாக பதில் நடவடிக்கையினை மேற்கொண்டது.
இதனால் இரு நாடுகளும் பரஸ்பரம் வரிகளை அதிகரித்ததால் பதற்றமான நிலை ஏற்பட்டது.
பல வாரங்களாகக் கடுமையான சொற்பிரயோகங்கள் ஏற்பட்டன.
இருப்பினும், நேற்று ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் நன்நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேவேளை, அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு அமையவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளதாகச் சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.