Breaking News

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

வாகன இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதனால் இந்த தொழில்துறையின் முக்கிய பிரிவுகளில் படிப்படியாக மீண்டும் செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் சர்வதேச ரீதியாக முன்னணியில் உள்ள வாகன உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் இறக்குமதி தளர்த்தப்பட்டமை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளதுடன் வாகனச் சந்தை நுட்பமான கட்டத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாகனச் சந்தை நுட்பமான மீட்சி கட்டத்தில் உள்ளதனால், அவதானமாகச் செயல்பட வேண்டியது அவசியம் என இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அதிக இறக்குமதி வரிகள், வெளிநாட்டு நாணயத்திற்கான வரையறுக்கப்பட்ட அணுகுமுறை மற்றும் ஸ்திரமான நீண்டகால கொள்கைகளின் அவசியத் தன்மை போன்ற காரணிகள் தொழில்துறையின் வளர்ச்சியைப் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Arul

Check Also

முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24 …