முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில், பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரசன்ன ரணவீர இன்று காலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையிலேயே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.