Breaking News

பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் பட பிரபல நடிகை மீனாட்சி !

மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.

அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து வசூலில் சாதனை படைத்தது.

இந்நிலையில், தற்போது மீனாட்சி பாலிவுட் சினிமா பக்கம் சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ‘ஸ்த்ரீ, மிமீ’ போன்ற ஹிட் படங்களை தயாரித்த தினேஷ் விஜய் தயாரிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, மீனாட்சி பாலிவுட் பக்கம் செல்வது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Arul

Check Also

முத்துவிடம் வசமாக சிக்கிய நபர், நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு.. சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, விஜய் டிவியின் டிஆர்பியில் டாப்பில் நீண்ட மாதங்களாக இருந்து வரும் தொடர். இப்போது கதையில், அவரவருக்கு ஒரு …