நாடளாவிய ரீதியில் வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் (Department of Prisons Srilanka) தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த 388 கைதிகளுக்கு இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க (Gamini B Dissanayake)தெரிவித்துள்ளார்.
இந்த பொது மன்னிப்பு வழங்கப்படும் கைதிகளுள் நான்கு பெண்களும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெசாக் போயா தினத்தை முன்னிட்டு, சிறை கைதிகள் மே 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் பார்வையாளர்களைச் சந்திக்க வாய்ப்பு வழங்கப்படும் என சிறைச்சாலை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாய்ப்பு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.