இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது வரவேற்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நான் வரவேற்கிறேன். அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதும், மோதலுக்குப் பதிலாக பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுப்பதும் உண்மையான அரசியல் மேதைமை. ஒரு அண்டை நாடு மற்றும் நண்பராக, ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் நீடித்த அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை ஆதரிக்க இலங்கை தயாராக உள்ளது” என தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.